பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் 35 வயதிற்குப் பிறகு அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின், டிராவிட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சையது மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரையிலும் 401 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
இதில், யூனிஸ் கான் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 35 வயதிற்கு மேல் அதிக சதங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 35 வயதிற்கு மேல், 30 போட்டிகளில் விளையாடியுள்ள யூனிஸ் கான் 13 சதங்கள் எடுத்துள்ளார்.
இதற்கு முன்பு ராகுல் டிராவிட் 47 போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் எடுத்துள்ளார். கிரஹாம் கூச் 52 போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 53 போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் எடுத்துள்ளார்.