Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் கிரிக்கெட் பந்து தாக்கியதில் பள்ளி மாணவி மரணம்…!

vinoth
வெள்ளி, 1 நவம்பர் 2024 (10:28 IST)
இந்தியாவைப் பொறுத்தவரை மற்ற அனைத்து விளையாட்டுகளையும் விட முன்னணியில் இருப்பது கிரிக்கெட்தான். சமீபகாலாக ஆண்களுக்கு நிகராக பெண்களும் இந்த கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பல இளம்பெண்கள் கிரிக்கெட்டை விளையாட்டை தொழில்முறையாக எடுத்து செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் கேரளாவில் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தபஸ்யா என்ற மாணவி பந்து தாக்கியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தபஸ்யா பள்ளியில் சக மாணவிகளோடு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.அப்போது அவர் பேட் செய்ய தயாரவதற்கு முன்பாகவே பந்துவீசப்பட, அதை அவர் எதிர்கொள்ள முடியாமல் தலையில் பந்து பட்டு மைதானத்திலேயே நிலைகுலைந்து விழுந்துள்ளார். அப்போது அவர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு தற்போது உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டியில் தோற்றால் கூட பார்ட்டி கேட்பார்கள்… வெளிநாட்டு வீரர்கள் குறித்து சேவாக் காட்டம்!

ஐதராபாத் மைதானத்தில் முகமது அசாரூதின் ஸ்டாண்ட் பெயர் மாற்றம்..!

ரொம்ப நாள் ஆசை மேடம்.. ப்ரீத்தி ஜிந்தாவை ஓடிப்போய் கட்டிப்பிடித்த RCB வீரர்!

CSK vs SRH மேட்ச் டிக்கெட்.. சீண்டாத சிஎஸ்கே ரசிகர்கள்! - அதிர்ச்சியில் சிஎஸ்கே நிர்வாகம்!

என்னை உள்ளே கூட விடமாட்டார்கள்… ஆனால் இப்போது என் பெயரில் ஸ்டாண்ட் – ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments