Publish Date: Thu, 31 Oct 2024 (15:01 IST)
Updated Date: Thu, 31 Oct 2024 (15:14 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூர் மற்றும் புனேவில் நடந்த டெஸ்ட் போட்டிகளை வென்ற நியுசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் அந்த அணியின் ஸ்டார் ப்ளேயரான கேன் வில்லியம்சன் விளையாடவில்லை. கிரோயிங் இஞ்சுரி காரணமாக இரு டெஸ்ட் போட்டிகளையும் இழந்தார் கேன் வில்லியம்சன்.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ராவுக்கு ஓய்வளிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரவுள்ளதால் அவருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
vinoth
Publish Date: Thu, 31 Oct 2024 (15:01 IST)
Updated Date: Thu, 31 Oct 2024 (15:14 IST)