Publish Date: Tue, 29 Oct 2024 (09:18 IST)
Updated Date: Tue, 29 Oct 2024 (09:44 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூர் மற்றும் புனேவில் நடந்த டெஸ்ட் போட்டிகளை வென்ற நியுசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் அந்த அணியின் ஸ்டார் ப்ளேயரான கேன் வில்லியம்சன் விளையாடவில்லை. கிரோயிங் இஞ்சுரி காரணமாக இரு டெஸ்ட் போட்டிகளையும் இழந்தார் கேன் வில்லியம்சன்.
இந்நிலையில் இப்போது தொடரை நியுசிலாந்து அணி வென்றுள்ள நிலையில் அவருக்கு மேலும் ஓய்வளிக்கும் விதமாக மும்பையில் ஒன்றாம் தேதி நடக்கும் டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
vinoth
Publish Date: Tue, 29 Oct 2024 (09:18 IST)
Updated Date: Tue, 29 Oct 2024 (09:44 IST)