Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

WPL 2024: இந்த தடவையாவது நிறைவேறுமா ஆர்சிபியின் கோப்பை கனவு! – இன்று டெல்லி அணியுடன் இறுதி மோதல்!

Advertiesment
RCB vs DC

Prasanth Karthick

, ஞாயிறு, 17 மார்ச் 2024 (09:29 IST)
பெண்கள் கிரிக்கெட் ப்ரிமீயர் லீக் போட்டியின் இன்றைய இறுதி போட்டியில் ஆர்சிபி அணியும், டெல்லி அணியும் மோதிக் கொள்கின்றன.



மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் போட்டியிட்டு வந்த நிலையில் இறுதி போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தகுதி பெற்றுள்ளன.

2008 முதலாக ஐபிஎல் போட்டியில் இருந்து வரும் ஆர்சிபி அணிக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனாலும் இதுவரை ஒருமுறைக் கூட ஆர்சிபி கோப்பை வெல்லவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கு உள்ளது. அந்த குறையை தீர்த்து வைக்கும் விதமாக மகளிர் ஆர்சிபி அணி தற்போது இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. மகளிர் ஆர்சிபியாவது கோப்பையை வெல்லுமா என ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த RCB vs DC இறுதி போட்டி இன்று மாலை 7.30 மணியளவில் தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா ஆப் மூலமகா கண்டு களிக்கலாம்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஐபிஎல் அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு: ஜெய்ஷா சொன்னது என்ன?