Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 21 April 2025
webdunia

ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. வங்கதேச அணிக்கு பதிலடி கொடுத்த இலங்கை..!

Advertiesment
வங்கதேசம்

Siva

, வெள்ளி, 15 மார்ச் 2024 (22:12 IST)
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் வங்கதேச அணி வென்றதை அடுத்து இரண்டாவது போட்டியில் வங்கதேச அணிக்கு பதிலடி கொடுத்து இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது

இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 286 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 287 என்ற இலக்கை நோக்கி இலங்கை பேட்டிங் செய்தது

அந்த அணி 47. 1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் இருக்கும் நிலையில் இந்த தொடரை வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை வந்து சேர்ந்த சி எஸ் கே தளபதி ஜடேஜா!