உலகக்கோப்பை டி-20 - நெதர்லாந்திற்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா சூப்பர் வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனையடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது..
இந்திய அணியில் ரோகித் சர்மா53( 39) , விராத் கோலி 62 (44)மற்றும் சூர்யகுமார் 51 (25)யாதவ் ஆகிய மூவரும் அரைசதம் அடித்து அசத்தினர்
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குனர் களமிறங்கிய நெதர்லாந்து அணியில், டிம் பிரிங்கில்20 ரன்கள், கூலின் 17 ரன்களும், மேக்ஸ் 16 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இந்திய அணி சார்பில். புவனேஷ்குமார் , படேல் மற்றும் அஷ்வின் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
எனவே இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Edited by Sinoj