நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டி: இந்தியாவின் 3 பேட்ஸ்மேன்கள் அபாரம்!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனையடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து உள்ளன.
இந்திய அணியில் ரோகித் சர்மா, விராத் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் அரைசதம் அடித்து உள்ளனர்.
இந்த நிலையில் 180 என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது
இந்தியா ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் குரூப் 2 பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துவிடும்.