உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக ஜிம்பாவே 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருமான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது ஜிம்பாவேயில் நடைபெற்று வருகிறது.
10அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இருந்து 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் முன்னேறியுள்ளன.
குரூப் பி பிரிவில் ஜிம்பாவே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும் முன்னேற்றியுள்ளன.
இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில், ஜிம்பாவே – அமெரிக்கா அணிகள் விளையாடின. இதில், டாஸ் வென்ற அமெரிக்கா , முதலில் பவுலிங் தேர்வு செய்தது. வில்லியம்சன் சதம் அடித்த பின்னர் 174 ரன்களில் அவுட்டானார். எனவே 50 ஓவர்களில் ஜிம்பாவே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்து, அமெரிக்காவுக்கு 409 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த அமெரிக்க அணியில், பராத்கர் 24 ரன்னும், ஜஸ்தீப் சிங்க 21 ரன்னும், கஜானந்த் சிங் 13 ரன்னும் அடித்த்னர்.
25.1 ஒவர்கள் முடிவில் இந்த 104 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. எனவே ஜிம்பாவே 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாவே சார்பில், ராசா மற்றும் ரிச்சர்ட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ரியான் 1 விக்கெட் கைப்பற்றினார்.