Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் தீராத முதுகுவலிப் பிரச்சனை… ஆசியக் கோப்பையையும் இழக்கும் ஸ்ரேயாஸ்?

Advertiesment
இந்தியா
, திங்கள், 26 ஜூன் 2023 (09:31 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்த போது, இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் காயமடைந்து போட்டியில் இருந்து விலகினார். அதையடுத்து  அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அவர் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களை இழந்தார். அவர் ஆசியக் கோப்பை தொடருக்கு மீண்டுவரக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி அவர் அந்த தொடருக்கும் திரும்ப வரமாட்டார் என தெரிகிறது.

ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி ஸ்ரேயாஸ் இன்னமும் முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், அதற்காக ஊசிகளை போட்டுக்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனிய விட கேப்டன் கூல் ஒருத்தர் இருக்கார்… கவாஸ்கர் புகழ்ந்த இந்திய கேப்டன்!