Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஐபிஎல் மேட்ச்சை மைதானத்தில் இலவசமா பாக்கலாம்! – ப்ரீமியர் லீக் அறிவிப்பு!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (08:34 IST)
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் இன்று நடைபெறும் பெண்கள் ஐபிஎல் போட்டியை இலவசமாக காணலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெண்களின் முன்னேற்றம் மற்றும் சகல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் பெண்களின் உரிமை மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டங்களையும் பலர் நடத்துகின்றனர். பெண்களை கௌரவிக்கும் விதமாக சில சுற்றுலா பகுதிகள், அருங்காட்சியகங்களில் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் விதமாக மகளிர் ஐபிஎல் போட்டியை இன்று மைதானத்தில் காண இலவச அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 அணிகளுக்கு இடையேயான மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை அனைவரும் நேரடியாக மைதானத்திற்கு வந்து இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments