Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்பா சாமி… என்ன பீல்டிங்யா இது? மாஸ் காட்டிய சந்தம்! – மிரட்சியடைந்த ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:05 IST)
நேற்று நடத்த பெண்கள் ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெண் வீராங்கணை நட்டகன் சந்தம் செய்த பீல்டிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருவது போலவே பெண்கள் கிரிக்கெட் டி20 போட்டியும் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி ஆட்டம் நேற்று மாலை ட்ரெய்ல் ப்ளேசர்ஸ் அணிக்கும், சூப்பர்நோவா அணிக்கும் நடைபெற்றது. இதில் முதலாவதாக விளையாடிய ட்ரெய்ல் ப்ளேசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தனர்.

இந்நிலையில் சேஸிங் இறங்கி சூப்பர்நோவாவின் ரன் ரேட்டை குறைக்க வேண்டிய கட்டாயம் ப்ளேசர்ஸ் அணிக்கு இருந்தது. சூப்பர்நோவாவின் ஓப்பனிங் பேட்ஸ்வுமன் அட்டப்பட்டுவை 6 ரன்களில் விக்கெட்டை வீழ்த்திய ப்ளேசர்ஸ் தொடர்ந்து நேர்த்தியாக பீல்டிங் செய்து 102 ரன்களில் சூப்பர் நோவாவை சுருட்டினர். இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் ட்ரெய்ல் ப்ளேசர்ஸ் அணி வென்றது.

இந்த ஆட்டத்தில் சூப்பர்நோவா பேட்ஸ்வுமன் அடித்த பந்து பவுண்டரி நோக்கி சென்றபோது ப்ளேசர்ஸ் அணி வீராங்கணை நட்டகன் சந்தம் தலைகீழாக பாய்ந்து சென்று பந்தை தடுத்தார். பின்னர் பவுண்டரி லைனை தாண்டி சென்று விழுந்தார். இதனால் பலத்த காயம் எதுவும் இல்லை என பின்னர் அவர் தெரிவித்தார். எனினும் அவரது இந்த அசாத்தியமான பீல்டிங்கை பார்த்த பலர் “இவர் ஒரு பெண் ஜான் டி ரோட்ஸ்” என்று ஆச்சர்யத்தில் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments