Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..? - அடுத்த சீசனுக்கு தயாராகும் தல தோனி!

Advertiesment
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..? - அடுத்த சீசனுக்கு தயாராகும் தல தோனி!
, திங்கள், 9 நவம்பர் 2020 (15:58 IST)
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து வெளியேறிய நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்காக தோனி ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போட்டோ வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இதுவரையிலும் கலந்து கொண்ட 10 சீசனிலும் மூன்று முறை கோப்பையை வென்றும், 7 முறை ப்ளே ஆஃப் சென்றும் மாஸாக வலம்வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை மோசமாக விளையாடி ப்ளே ஆப் தகுதியை முதலாவதாக இழந்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக மட்டுமே விளையாடுவதால் தொடர்ந்து ரசிகர்கள் சிஎஸ்கேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளதால் கேப்டன் தோனி தீவிரமான உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் கோப்பை சிஎஸ்கேவுக்குதான் என ஆரூடம் சொல்லி வருகிறார்களாம் தோனி ரசிகர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த சீசனின் சிறந்த கண்டுபிடிப்பு நட்ராஜன்தான் – புகழ்ந்து தள்ளும் விமர்சகர்கள்!