Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

vinoth
வெள்ளி, 18 ஜூலை 2025 (10:29 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளையும் இந்தியா ஒரு போட்டியையும் வென்றுள்ளது. அடுத்த போட்டி மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.

இந்த போட்டிக்கான அணியில் இடம்பெறும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷெட் தெரிவித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவருக்கு விரலில் காயமேற்பட்டதால் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார்.

 அவருக்குப் பதில் துருவ் ஜுரெல் மாற்று விக்கெட் கீப்பராகப் பணியாற்றினார். பண்ட் வலியோடு பேட் செய்தார். இந்நிலையில் பண்ட்டின் விரல் வலி இனிமேல் குணமாகும் என தெரிவித்துள்ள ரியான், அவருக்கு விக்கெட் கீப்பிங் செய்வதால்தான் வலி அதிகமாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அவருக்கு வலி குறையாத பட்சத்தில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments