Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாள் நினைவில் இருக்கும்...ஷாருக்கான் நெகிழ்சி

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (19:49 IST)
முஸ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஷாருக்கான் கடைசிப் பந்தில்  சிக்ஸர் அடித்து அணிக்கு கோப்பை பெற்றுத் தந்தார். தற்போது  ஷாருக்கான் இதுகுறித்து  கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக முஸ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகள் தகுதி பெற்றன.

இந்நிலையில் நேற்றுநடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 152 என்ற இலக்கை நோக்கி விளையாடிய தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 153 ரன்கள் எடுத்ததை அடுத்து தமிழக அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அணியின் நாராயணன் ஜெகதீசன் அதிகபட்சமாக 41 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இறுதிப் போட்டியில் 15 பந்துகளில் 33 ரன்களை விளாசிய ஷாருக்கான் அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தது குறித்து ஷாருக்கான் கூறியுள்ளதாவது:  கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தது சிறப்பான ஒன்று. இப்போட்டி நீண்ட நாட்கள் என் நினைவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இப்போட்டியை தோனி ரசித்துப் பார்க்கும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments