Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டவுனில் வெற்றிக் கனியை ருசிக்காத இந்தியா… இன்றைய போட்டியிலாவது வரலாறு மாறுமா?

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (09:28 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று கேப்டவுன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் அறிமுகமாகலாம் என தெரிகிறது. இந்த போட்டியை வென்றால் மட்டுமே இந்தியா தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் இந்திய அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டி நடக்கவுள்ள கேப்டவுன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் நான்கு போட்டிகளை தென்னாப்பிரிக்கா வெல்ல 2 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. ஒரு வெற்றியைக் கூட இந்திய அணியால் பெறமுடியவில்லை. இன்றைய போட்டியிலாவது அந்த மோசமான சாதனை திருத்தி எழுதப்படுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments