Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

Advertiesment
PBKS vs MI

Prasanth Karthick

, ஞாயிறு, 1 ஜூன் 2025 (11:21 IST)

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தேர்வாக கடைசி வாய்ப்பாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.

 

பரபரப்பாக நடந்து வந்த ஐபிஎல் சீசன்கள் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பஞ்சாபை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்றது. 

 

இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை இந்தியன்ஸ் இன்றைய எலிமினேட்டர் சுற்றில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். வெற்றிக்கும், தோல்விக்கும் நூல் இழை வித்தியாசத்தில் உள்ள இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் இரு அணிகளுமே தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

14 போட்டிகளில் போட்டியிட்ட மும்பை 8 போட்டிகளிலும், பஞ்சாப் 9 போட்டிகளிலும் போராடி வென்றுதான் இந்த கட்டத்தை அடைந்துள்ளனர் என்பதால் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு இரு அணிகளுக்குமே வாய்ப்பு 50-50 உள்ளது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!