Publish Date: Sat, 31 May 2025 (10:09 IST)
Updated Date: Sat, 31 May 2025 (10:41 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார். ஆனால் அவர் அடிக்கடி காயமடைவது அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் கூட அவர் முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. ஆனாலும் அதன் பின்னர் வந்து வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற அவரும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் பும்ரா விக்கெட் எடுத்த பின்னர் அதை பெரிதாகக் கொண்டாடமல் அமைதியாக இருப்பது குறித்த கேள்விக்கு “நான் வெற்றி பெறுவதற்காகவே விளையாடுகிறேன். ஆக்ரோஷமாகக் கொண்டாடுவதற்காக அல்ல. அதே நேரத்தில் நாம் எதிரணியினரையும் மதிக்க வேண்டும். எல்லையைல் கடந்து ஒரு கோமாளியைப் போலத் தோற்றமளிக்க நான் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.