Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை கேப்டன் யார்? ரோஹித் சர்மா - கவுதம் கம்பீர் உரசல்!? காரணமான ஹர்திக் பாண்ட்யா!

Prasanth Karthick
ஞாயிறு, 19 ஜனவரி 2025 (12:54 IST)

நடைபெற உள்ள சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு துணை கேப்டனை நியமிப்பதில் ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் தகுதியையும் இழந்தது. இந்நிலையில் அடுத்து நடைபெற உள்ள சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரிலாவது இந்தியா வெற்றிபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் கடந்த சில நாட்களாகவே நடந்து வருகிறது. சமீபமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் இணைந்தது முதலாகவே இந்திய அணி போட்டிகளில் தொடர் தோல்வி சந்தித்து வருவது கேள்வியை எழுப்பியுள்ளது.
 

ALSO READ: பத்திக்கிச்சு.. நம்பிக்கை விடாமுயற்சி..! - வைப் மோடுக்கு கொண்டு சென்ற அனிருத்! - Pathikichu Lyric!

 

இந்நிலையில் இந்திய அணி தேர்வு குறித்த ஆலோசனையில் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு இந்திய அணி துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க கவுதம் கம்பீர் விரும்பிய நிலையில், அணி கேப்டனான ரோஹித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரும் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆலோசனை கூட்டத்தில் நீண்ட விவாதம் நடைபெற்று கம்பீரின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சீசனில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. அதுமுதலே இருவருக்கும் முரண்பாடு இருந்து வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன மே.இ.தீவுகள்..!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்… ரசிகர்கள் புலம்பல்!

ரஞ்சிக் கோப்பை தொடரில் கோலி விளையாட மாட்டார்… வெளியான தகவல்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை இன்று அறிவிக்கவுள்ள அகார்கர் & ரோஹித் ஷர்மா!

ரஞ்சி போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த ரிஷப் பண்ட்… இதுதான் காரணமாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments