Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன மே.இ.தீவுகள்..!

Siva
ஞாயிறு, 19 ஜனவரி 2025 (08:03 IST)
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டெஸ்ட் போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியின் சஹில் 84 ரன்களையும், முகமது ரிஸ்வான் 71 ரன்களையும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆறுபேரும் சிங்கிள் டிஜிட்டல் ரன்கள் மட்டுமே எடுத்து தங்கள் அணியை அபாயத்திற்கு உள்ளாக்கினர்.

பாகிஸ்தானின் நோமன் அலி அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். சஜித் கான் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி தற்போது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. கேப்டன் மசூத் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். தற்போது பாகிஸ்தான் மூன்று விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் 222 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்… ரசிகர்கள் புலம்பல்!

ரஞ்சிக் கோப்பை தொடரில் கோலி விளையாட மாட்டார்… வெளியான தகவல்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை இன்று அறிவிக்கவுள்ள அகார்கர் & ரோஹித் ஷர்மா!

ரஞ்சி போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த ரிஷப் பண்ட்… இதுதான் காரணமாம்!

சமாஜ்வாதி எம்பியை திருமணம் செய்கிறார் ரிங்கு சிங்: எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments