Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

Advertiesment
Shardhul Thakur

Prasanth Karthick

, புதன், 9 ஏப்ரல் 2025 (09:57 IST)

நேற்றைய ஐபிஎல் போட்டியில் வைடுகளை அள்ளிக் கொடுத்து மோசமான புதிய சாதனையை படைத்துள்ளார் ஷர்துல் தாக்கூர்.

 

நேற்று நடந்த மதிய போட்டியில் LSG - KKR அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி சிறப்பாக விளையாடி 238 ரன்களை குவித்த நிலையில், பேட்டிங்கில் இறங்கிய கொல்கத்தா அணியே, நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என அதிரடியாக விளையாடி 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவிடம் தோல்வி அடைந்தார்கள்.

 

என்னதான் லக்னோ பேட்டிங்கை சிறப்பாக ஆடியிருந்தாலும், பந்துவீச்சில் லக்னோ அணிக்கு இருந்த பலவீனத்தை கொல்கத்தா அணி நன்றாக பயன்படுத்திக் கொண்டது. கொல்கத்தா அணிக்கு எதிராக லக்னோ வீரர்கள் வீசிய எக்ஸ்ட்ரா பந்துகளே மொத்தம் 20.

 

அதிலும் ஷர்துல் தாக்கூர் செய்த சம்பவத்திற்கெல்லாம் ரிஷப் பண்ட் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார். 13வது ஓவரில் பந்து வீசிய ஷர்துல் தாக்கூர் தொடர்ந்து 5 வைட் பால்களை வீசினார். அடுத்தடுத்து வைட் பந்துகளை வீசிக் கொண்டே இருக்க அதை பார்த்து ரசிகர்களே கடுப்பாகிவிட்டனர்.

 

ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 5 முறை வைடுகளை வீசி தொடர்ந்து அதிக வைட் பந்துகள் வீசிய ஒரே பவுலர் என்ற மோசமான சூப்பர் சாதனையை படைத்துள்ளார் ஷர்துல் தாக்கூர். 4 ஓவகள் பந்து வீசிய ஷர்துல் தாக்கூரும், ஆகாஷ் தீப்பும் தலா 2 விக்கெட்டுகளை வீசியிருந்தாலும் கூட 50க்கும் மேல் ரன்களையும் விட்டுக் கொடுத்திருந்தனர். பவுலிங்கில் இந்த பலவீனம் தொடர்ந்தால் லக்னோ அடுத்தடுத்த போட்டிகளில் மாட்டிக் கொள்ளும் என்கின்றனர் ரசிகர்கள்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!