Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கியூட் காதலியுடன் ரொமான்ஸ்..! புகைப்படத்தை வெளியிட்ட ரிஷப் பண்ட்!

கியூட் காதலியுடன் ரொமான்ஸ்..!  புகைப்படத்தை  வெளியிட்ட ரிஷப் பண்ட்!
, வியாழன், 17 ஜனவரி 2019 (19:20 IST)
"உன்னை நான் சந்தோஷமா வைத்திருக்க விரும்புகிறேன்  ஏனென்றால் உன்னால் மட்டும் தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்". என  காதலியை கொஞ்சி ரொமான்ஸ் செய்துள்ளார்  இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பண்ட்!


 
அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், வார்த்தைகளால் மட்டுமல்லாது பேட்டாலும் பேசி அசத்தினார் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். சிட்னி டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் விளாசி கடைசி வரை நாட் அவுட்டாக நின்று, ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் எனும் பெருமையைப் பெற்றார்.
 
மேலும் தோனிக்கு மாற்றாக கருதப்படும் இவர் கிரிக்கெட் மட்டுமின்றி பல விஷயங்களில் லைம்லைட்டிலேயே இருக்கிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரில் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்னை இவர் கலாயத்தது கடந்த வாரம் இணையத்தின் ஹிட் டாபிக். 
 
இந்திய அணியின் சிறந்த எண்டர்டெயினராக திகழும் இளம் வீரர் ரிஷப் பண்ட் தனது காதலி இஷா நெகியுடன் எடுத்துக்கொண்ட செல்பியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 
 
21 வயதான இளம் வீரர் ரிஷப் தற்போது மீண்டும் டிரெண்டாகி வருகிறார். காரணம்  அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் தான். 
 
அந்த பதிவில்,  “உன்னை நான் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க விரும்புகிறேன். ஏனெனில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீ தான் காரணம்” என்று குறிப்பிட்டு தனது காதலியின் புகைப்படத்தை ரிஷப் பகிர்ந்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I just want to make you happy because you are the reason I am so happy ❤️

A post shared by Rishabh Pant (@rishabpant) on

இஷா நெகியும் அதே புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, “என்னவன், என்னில் பாதி, என் சிறந்த நண்பன், என் வாழ்வின் காதல்” என்று வார்த்தைகளை பொழிந்துள்ளார்.

விளையாட்டில் அனைத்து அமசங்களும் நச்சென்று பொருந்தியிருக்கும் ரிஷப் பண்ட்டிற்கு, நச்சுனு கேர்ள் ஃபிரெண்டும் அமைந்துள்ளார்.
 
ரிஷப் பண்ட் தற்போது ஒருநாள் போட்டிகளில்  இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இவர் தனது காதலியுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் : அரையிறுதிக்கு தகுதிபெற்ற தமிழக அணி..!