Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கொரோனா!- போட்டிகள் நடைபெறுமா?

Advertiesment
பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கொரோனா!- போட்டிகள் நடைபெறுமா?
, ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (11:25 IST)
பாகிஸ்தானுடனான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்காக பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை கராச்சியில் தொடங்க உள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அணி கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் சென்றடைந்தனர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அணி பயிற்சியாளர்கள் குழுவில் ஒருவருக்கும், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களான ராஸ்டன் செஸ், ஷெல்டன் காட்ரெல் மற்றும் கைல் மயர்ஸ் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டல் அறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை திட்டமிட்டபடி மற்ற வீரர்களை கொண்டு போட்டி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூக மெய்நிகர் தளத்தை வெளியிட்ட மெடா - இனி பயனருக்கு பிடித்தபடி கேம் வடிவமைத்து விளையாடலாம்