Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் - இந்திய வீரர் கே.எல். ராகுல்!

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் - இந்திய வீரர்  கே.எல். ராகுல்!
, சனி, 27 ஆகஸ்ட் 2022 (21:00 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இன்று தொடங்கிய நிலையில் நாளை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

ஆசிய கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில்  தொடங்கியுள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களதேஷ், ஆப்கானிஸ்தான் அகிய அணிகள் விளையாடுகின்றன.

இத்தொடரில் இன்றைய டி-20 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை விளையாடி வருகிறது.

நாளை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியைப் பார்க்க உலகமே ஆவலாக உள்ளது.

 இதுகுறித்து இந்திய வீரர் ராகுல் கூறியதாவது:  கடந்த டி-20 உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்று நன்றாக விளையாட  நினைத்திருந்தோம். ஆனால், பாகிஸ்தான் அணியிடம் தோற்றோம். அது வருந்தமாக உள்ளது,. அதற்குப் பதிலடி நாளைய போட்டியில் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு..இலங்கை 6 ஓவரில் 50 ரன் கள்