Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்களுக்கும் இப்படி ஆடத் தெரியும்!: விராட் கோலி சவால்

Advertiesment
எங்களுக்கும் இப்படி ஆடத் தெரியும்!: விராட் கோலி சவால்
, திங்கள், 14 நவம்பர் 2016 (17:10 IST)
டெஸ்ட் போட்டிகளில் டிரா செய்வது எப்படி என்று எங்களுக்கும் தெரியும் என்று இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.


 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதனாத்தில் நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் முறையே 537 மற்றும் 260 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 488 ரன்கள் எடுத்தது.

இதனால், இந்திய அணிக்கு 310 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக இரு அணி கேப்டன்களும் முடிவிற்கு வந்தனர்.

ஆட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ”நல்லது. குறைந்தபட்சம் போட்டியை ஆட்டத்தை டிராவில் முடிப்பது எப்படி என்பதை இப்போது தெரிந்துகொண்டிருக்கிறோம்.’

இதற்கு முன்னதாக ஒருசிலர் போட்டிகளில் வெற்றி பெறுகிறோம் அல்லது தோற்கிறோம். டிரா செய்வது எப்படி என்பது எங்கள் அணிக்கு தெரியுமா? என்று சந்தேகம் கிளப்பி இருந்தனர்.

நான் ரவீந்திர ஜடேஜாவிடம், ‘டெஸ்ட் விளையாட்டின் மற்றொரு அம்சத்தில் முன்னேற்றம் காண, நாம் இருவருக்கும் இது ஒரு அருமையான சந்தர்ப்பம். எதிர்காலத்திலும் இது போன்ற நிலைமையை மீண்டும் சந்திக்க வேண்டி வரலாம். ஒருவேளை நாம் மீண்டும் நம்மை பொருத்திப் பார்ப்பதற்கும், இயல்பை வெளிப்படுத்தவும் வேண்டு இருக்கும்’ என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைதானத்தில் சண்டை: இந்திய வீரர்கள் சர்ச்சை!!