Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

இந்திய அணியை வழிநடத்தும் அனுபவம் இன்னும் ராகுலுக்கு வரவில்லை… விளாசிய முன்னாள் வீரர்!

Advertiesment
கே எல் ராகுல்
, வெள்ளி, 9 டிசம்பர் 2022 (16:18 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆகும் அனுபவத்தை இன்னும் கே எல் ராகுல் பெறவில்லை என்று முன்னாள் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பீல்டிங்கின் போது கேப்டன் ரோஹித் ஷர்மா காயமடைந்து வெளியேறினார். அதனால் அணியை வழிநடத்தும் பொறுப்பை கே எல் ராகுல் ஏற்றார். ஆனால் அதுவரை தடுமாறி வந்த பங்களாதேஷ் அணி அதன் பின்னர் மிகச்சிறப்பாக விளையாடி 271 ரன்கள் சேர்த்து, வெற்றியும் பெற்றது.

இந்நிலையில் கே எல் ராகுல் பற்றி பேசியுள்ள வாசிம் ஜாஃபர் “கே எல் ராகுல் இன்னும் கேப்டனாகி இந்திய அணியை வழிநடத்தும் அனுபவத்தைப் பெறவில்லை.  ரோஹித் ஷர்மா இல்லாததால் இந்திய அணி தடுமாறியது. மிகச்சிறந்த பவுலர்கள் இருந்தும் அவரால் பங்களாதேஷ் அணியின் வேகத்தைத் தடுக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலுவான ஸ்கோரில் டிக்ளேர் செய்த ஆஸி. அணி – வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்!