Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்குகள் கூட இவ்வளவு வாழைப்பழங்களை சாப்பிடாது… பாகிஸ்தான் அணியைக் கிண்டல் செய்த முன்னாள் வீரர்!

vinoth
புதன், 26 பிப்ரவரி 2025 (16:44 IST)
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடர் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது நாளிலேயே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு வல்லுனர்கள் பலக் காரணங்களை சொல்லி வருகின்றனர். அணியில் ஒற்றுமையின்மை, எந்த வீரரும் பொறுப்போடு விளையாடாதது மற்றும் போட்டியின் எந்தக் கட்டத்திலும் போராடும் தன்மையை வெளிக்காட்டாதது என அனைத்துத் துறைகளிலும் அந்த அணி பலவீனமாக உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அந்த அணியினரைக் கடுமையாக கேலி செய்துள்ளார். அவர் பேசும்போது “இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது இடைவேளையின் போது ஒரு ட்ரே நிறைய வாழைப்பழங்கள் வந்ததை நாம் பார்த்தோம். குரங்குகள் கூட இவர்கள் போல அவ்வளவு வாழைப் பழங்களை சாப்பிடாது. நாங்கள் இம்ரான் கான் முன்னால் வாழைப் பழங்களை சாப்பிட்டால் அவர் கண்டிப்பாக எங்களை அடித்து விடுவார்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு எதிரான சதம்… ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட கோலி!

கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயாரா?... வெங்கடேஷ் ஐயர் கொடுத்த பதில்!

பாகிஸ்தானுக்கு மட்டும் ஏன் அப்படி..? ஐசிசி மேல் பழியைப் போடும் முன்னாள் கேப்டன்!

பாகிஸ்தான் அணியை என்னிடம் கொடுங்கள்… நான் மாற்றிக் காட்டுகிறேன் – யுவ்ராஜ் சிங் தந்தை ஆவேசம்!

தொடர் மழை எதிரொலி.. சாம்பியன்ஸ் டிராபி இன்றைய போட்டி ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments