Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பீருக்குப் பதிலாக இங்கிலாந்து செல்லும் விவிஎஸ் லஷ்மன்!

vinoth
திங்கள், 16 ஜூன் 2025 (07:22 IST)
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக . இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. வழக்கமாக இந்திய அணி இங்கிலாந்து செல்லும் போது தொடர்ந்து தோல்விகளைப் பெற்று வரும். ஆனால் தோனி மற்றும் கோலி கேப்டன்சியில் இந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இந்திய அணி தொடர்களை வென்றது.

ஆனால் இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த இளம் அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் வெற்றி என்பது இந்த தொடரில் கேள்விக்குறியாகவுள்ளது. இங்கிலாந்தில் அனுபவமற்ற இந்திய அணிக்கு அனுபவமுள்ள கம்பீர் பயிற்சியாளராக இருப்பது அனுகூலமாக பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் ஜூன் 20 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு கம்பீர் அவசரமாக இந்தியா திரும்பினார். அவரின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவரைக் கவனித்துக் கொள்ள ஒரு வார காலம் இந்தியாவுக்கு திரும்பினார் கம்பீர். அவர் இந்தியா திரும்புவதற்கு முன்பாக இந்திய அணியை முதல் டெஸ்ட் போட்டிக்காக தயார்படுத்துவதற்காக விவிஎஸ் லஷ்மன் இங்கிலாந்து செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இர்ஃபான் பதான் மட்டும் சொல்லல… தோனிய சோதனை செய்யணும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பிசிசிஐ தலைவர் ஆகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

முதல் 5 போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர்.. புதிய உலக சாதனை..!

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடுத்த கட்டுரையில்
Show comments