Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் ஸ்பான்ஸர்... சீன நிறுவனத்தை புறக்கணிக்க முடியாது – பிசிசிஐ திட்டவட்டம்!

Advertiesment
ஐபிஎல் ஸ்பான்ஸர்... சீன நிறுவனத்தை புறக்கணிக்க முடியாது – பிசிசிஐ திட்டவட்டம்!
, சனி, 20 ஜூன் 2020 (08:21 IST)
சீன நிறுவனமான விவோவை ஐபிஎல் ஸ்பானஸர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்க முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஜூன் 15ம் தேதி லடாக் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் எல்லையோரத்தில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய அரசு கூறியது. ஆனால், சீனத் தரப்பில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுகின்றன. தங்கள் பகுதியில் எதிராளி ஊடுருவியதாக இரு தரப்பும் புகார் கூறுகின்றன.

இதையடுத்து இந்தியாவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கல் எழுந்துள்ளன. ஆனால் இது நடைமுறையில் எந்தளவு சாத்தியம் எனத் தெரியவில்லை. சீனாவின் விவோ நிறுவனம் இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சராக இருக்கிறது. அந்த நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் குரல்கள் எழுந்தன.

ஆனால் அது சாத்தியமில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு செய்தால் சுமார் 500 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் எனத் தெரிகிறது. விவோ நிறுவனம் 2017 ம் ஆண்டு முதல் 2022 வரை ஐந்து வருடத்திற்கு ஐ.பி.எல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சராக இருக்க 2199 கோடி ரூபாய்க்கு பிசிசிஐ-யிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2011 உலகக்கோப்பையில் பணத்துக்காக விலைபோனோமா ? – சங்ககரா பதில்!