Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாதனை மேல் சாதனை - போதுமடா கோலி

சாதனை மேல் சாதனை - போதுமடா கோலி
, செவ்வாய், 23 அக்டோபர் 2018 (17:45 IST)
இந்திய கேப்டன் ரன்மெஷின் கோலி விரைவில் கடக்கப்போகும் 10000 ரன்களின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்த இருக்கிறார்.

இறங்கி விளையாடும் ஒவ்வொரு மேட்ச்களிலும் எதாவது ஒரு சாதனையை முறியடித்து வரும் இந்திய கேப்டன் விராட் கோலி விரைவில் இன்னொரு சாதனைக்கு சொந்தகாரராக இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்குமே ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களைக் கடப்பது மிகப்பெரிய கனவாக இருக்கும்.

ஆனால் இதுவரை 12 பேர் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அதில் நான்குபேர்(சச்சின், டிராவிட், கங்குலி, தோனி) இந்தியர்கள். அடுத்து ஐந்தாவது வீரராக இந்தியாவின் சார்பாக விராட் கோலி இணைய இருக்கிறார். 10000 ரன்களைக் கடப்பதற்கு இன்னும் 81 ரன்கள் தேவைப்படும் நிலையில் அதை அவர் இன்னும் இரண்டு இன்னிங்ஸில் எடுத்துவிடுவார் என்றால் கூட மிகக் குறைவான இன்னிங்ஸ்களில் 10000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெயரைப் பெறுவார்.

இதுவரை 212 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி அதில் 204 இன்னிங்ஸ்களில் பேட் செய்து சராசரியாக ஒரு ஆட்டத்தில் 58 ரன்கள் வீதம் 9919 ரன்கள் சேர்த்துள்ளார். இன்னும் 81 ரன்களை அவர் சேர்க்கும் போது சச்சினின் சாதனையை முறியடிக்க உள்ளார்.

தற்போது முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் அந்த சாதனையை 259 இன்னிங்ஸ்களில் செய்துள்ளார். அவரையடுத்து குறைந்த இன்னிங்ஸில் அந்த சாதனையை செய்துள்ள வீரர்கள் கங்குலி-263, பாண்டிங்- 266, காலிஸ்-272, தோனி-273, லாரா-278, டிராவி-287, தில்சான் -293, சங்கக்ரா -296, இன்சமாம் உல் ஹக் -299, ஜெயசூர்யா -328, ஜெயவர்தனே-333. ஆகிய இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் தென் ஆப்பிரிக்காவின் ஹசீம் அம்லா மட்டுமே விராட் கோலியின் இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 வயதில் ஓய்வு –இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அறிவிப்பு