கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்ததே அதற்கு சாட்சி.
அந்த தொடரில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார். இந்நிலையில் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த முடிவை ரோஹித் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ரோஹித்தின் இந்த திடீர் அறிவிப்புக்குப் பின்னால் பிசிசிஐயின் அழுத்த ம் உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் அதை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மறுத்துள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர் “ரோஹித் ஷர்மாவின் ஓய்வு முடிவு அவரின் தனிப்பட்ட முடிவுதான். பிசிசிஐ நிர்வாகமோ அல்லது எந்த அதிகாரியோ அவருக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.