ஐபிஎல் போட்டிகளுக்காக அரபு அமீரகம் சென்றுள்ள விராட் கோலி சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கொரோனா காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாத நிலையில் அரபு அமீரகத்தில் போட்டிகள் நடத்த முடிவானது, அதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அமீரகம் சென்றுள்ள நிலையில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வீரர்கள் என்பவர்கள் தலையில் கவசம் அணிந்து, வாள் ஏந்தி வருபவர்கள் அல்ல. ஆனால் அதிகமான பொறுப்புணர்வுடன் என்னையும் உங்களையும் காப்பாற்ற போராடுபவர்கள் அவர்கள். நமது நாளை காப்பாற்றிய உண்மையான சேலஞ்சர்ஸை விரைவில் காண்பீர்கள்” என்று பேசியுள்ளார்.
கோலியின் இந்த வீடியோ கொரோனா பாதிப்பில் மக்களை காக்க தீவிரமாக போராடி வரும் முன்கள வீரர்கள் குறித்து இருக்கும் என கூறப்படுகிறது.