வாண்டெட்டாய் சிக்கும் கோலி! இந்திய அணியில் ரோகித் இல்லையா?

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (15:48 IST)
விராட் கோலி சக வீரர்களுடன் எடுத்த புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் நிலையில், அதில் ரோகித் சர்மா இல்லாதது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
 
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு புறப்படும் முன்பாக விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது, ரோகித்துடனான மோதல் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தது பின்வருமாறு,  
 
எனக்கு ஒரு நபரை பிடிக்கவில்லை என்றால் நான் அவரிடம் எப்படி நடந்துக்கொள்கிறேன் என்பதை என் முகத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளாம். நான் ரோகித் சர்மாவை பல முறை பாராட்டி உள்ளேன். அவர் சிறந்தவர் என்பதை நம்புகிறேன். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார். 
கோலியின் இந்த பேட்டிக்கு பின்னர் பிரச்சனை ஏதும் இல்லை என தெளிவானதாக நினைத்த நிலையில், கோலி இந்திய அணி வீரர்களுடன் எடுத்துள்ள செல்பியில் ரோகித் இல்லாதது மீண்டும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த சர்ச்சை விவாதங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது விராட் கோலி சக வீரர்களுடன் எடுத்த புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் நிலையில், அதில் ரோகித் சர்மா இல்லாதது ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது.
 
அதோடு அந்த பதிவில் கோலி ஸ்குவாட் என குறிப்பிட்டுள்ளதால் ரோகித் இந்தைய அணியில் இல்லையா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயார் – 26 கிலோ எடைக் குறைத்த சானியா மிர்சா !