Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரிலாவது விளையாடுவாரா கோலி? திடீர்னு கிளம்பிய வதந்தி!

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (11:56 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இந்திய அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படும் கோலி இடம்பெறவில்லை. முதலில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய கோலி, இப்போது முழுவதுமாக விலகியுள்ளார். பிசிசிஐ தரப்பை கடைசி வரை தொடர்பு கொள்ளாமல் இருந்த கோலி, கடைசி கட்டத்தில் போன் செய்து தான் முழு தொடரில் இருந்தும் விலகிக் கொள்வதாக கூறினாராம். அதனால் அவருக்கு மாற்று வீரராக சர்பராஸ் கானை அணியில் இணைத்துள்ளனர். கோலி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் ஒரு முக்கியமான டெஸ்ட் தொடரை இதுவரை இழந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மார்ச் மத்தியில் இந்த தொடர் முடிவடையும் நிலையில் மார்ச் இறுதியில் தொடங்கும் ஐபிஎல் தொடரிலும் ஆரம்பத்தில் சில போட்டிகளில் கோலி களமிறங்க மாட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments