Publish Date: Sat, 10 Feb 2024 (11:32 IST)
Updated Date: Sat, 10 Feb 2024 (11:55 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் இந்திய அணியின் விராட் கோலியின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. அவர் சொந்த காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில் தற்போது மொத்த தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளார். அதே போல் முதுகுவலி காரணமாக அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் விலக்கப்பட்டுள்ளார்.
கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி
ரோகித் சர்மா, பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், சுப்மன் கில், சிராஜ் , முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அக்சர் படேல், கேஎல் ராகுல், ஜடேஜா, துருவ் ஜுரெல், கேஎஸ் பரத், சர்பராஸ் கான், ரஜத் பட்டிதர், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர்.