கிரிக்கெட் சாதனை பட்டியலில் அடுத்தடுத்து பல சாதனைகளை செய்து வரும் விராட் கோலி இன்றைய டெஸ்ட் போட்டியில் ஈட்டிய ஸ்கோரின் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் ஏராளமான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர்களின் ஒருவர் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கோலி தற்போது மிடில் ஆர்டரில் விளையாடி வந்தாலும் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறார்.
இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியாவிற்கு வலுக் கொடுத்து வருகிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய விராட் கோலி 31 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்து 20 ரன்களை குவித்தார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் விராட் கோலி ஈட்டிய ஸ்கோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் 549 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை கோலி படைத்துள்ளார். அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் கோலி 6வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அடுத்து சங்ககரா, ரிக்கி பாண்டிங், ஜெயவர்தனே, ஜாக் காலிஸ் ஆகியோர் உள்ளனர்.