Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சவாலானது- ரோஹித் சர்மா

Advertiesment
rohit sharma
, புதன், 8 பிப்ரவரி 2023 (17:57 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சவாலாக இருக்குமென்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.  டெல்லியில், 2 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 21 வரை நடக்கவுள்ளது. அகமதாபாத்தில் 3 வது டெஸ்ட் போட்டி மார்ச் 1 முதல்  5 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இதேபோல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 17, 19, 22 ஆம் தேதி வரையில் மும்பை, விசாக பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்க  உள்ளது.

இந்த தொடரில் 3 போட்டிகளையாவது வென்றால்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
 

ALSO READ: ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடர்… சூர்யகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பு
 
இந்த நிலையில், இந்த டெஸ்ட் தொடர் பற்றி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இது ஒரு சவாலான தொடர்; 4 டெஸ்ட் போட்டிகள் உள்ள இத்தொடரை நாங்கள் வெல்ல நினைக்கிறோம். இந்திய வீரர்கள் அனைவரும்  நல்ல பார்மில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் ஐபிஎல்.. 409 வீராங்கனைகள் தேர்வாகியுள்ளதாக தகவல்!