Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இந்த சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன் கோலிதான்… அவருக்கு நிகரா?’… பாகிஸ்தான் பவுலர் புகழ்ச்சி!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (09:18 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, மீண்டும் பார்முக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.  31 ரன்களுக்கு 4 ரன்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை கட்டிக்காத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினார் கோலி.

அவர் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்த இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளு 4 சிக்ஸர்களும் அடக்கம். அவரின் வாழ்நாள் சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ள கோலியை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள்  வீரர்கள் என அனைவரும் அவரைப் பாராட்டி தீபாவளிக்கு முந்தைய நாளே இந்தியாவில் தீபாவளி தொடங்கி பலரும் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதே போல நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் அரைசதம் அடித்துக் கலக்கினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முகமது ஆமீர் “இந்த சகாப்தத்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் கோலிதான். அவரை நாம் வேறு யாருடனும் ஒப்பிடவே முடியாது.” எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments