Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

vinoth
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (15:12 IST)
உலகளவில் கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து அதிகம் பேரால் சமூகவலைதளங்களில் பின்தொடரப்படும் வீரராக கோலி இருக்கிறார். இதனால் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் நிறைய விளம்பரங்களை செய்து வருகிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பைத் தொடரை வென்றதும் அந்த வடிவிலானப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் அவர் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்துக்குள் உள்ளார். இந்நிலையில் கோலி பற்றி பேசியுள்ள சுரேஷ் ரெய்னா “கோலி வெகு சீக்கிரமாகவே டி 20 போட்டிகளில் ஓய்வை அறிவித்துவிட்டார். அவர் மிக எளிதாக 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

‘எங்களுக்கு இப்போ RCB தான் இன்ஸ்பிரேஷன்’… CSK பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை!

ஒரு ஓவரில் போட்டியின் முடிவை மாற்றிய ஹேசில்வுட்… RR கையிலிருந்த வெற்றியைப் பறித்த ஆட்டநாயகன்!

‘எவ்ளோ அடிச்சாலும் இந்த மைதானத்துக்குப் பத்தாது’… வெற்றிக்குப் பின் கோலி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments