Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் கேப்டனுக்கு வாழ்த்து கூறிய விராட் கோலி !

Advertiesment
முன்னாள் கேப்டனுக்கு வாழ்த்து கூறிய விராட் கோலி !
, புதன், 6 ஜனவரி 2021 (18:12 IST)
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் கேப்டன் கபில்தேவிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன்று தனது 62 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், மகிழ்சிகரமான பிறந்தநாள் வாழ்த்துகள் கபில்தேவ் சார் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன்மும் சந்தோஷத்துடன் ஆரோக்கியமாக இருக்க நான் வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
webdunia

கடந்த  1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் கேப்டனாக இருந்து இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை பெற்றுதந்தவர் கபில்தேவ் ஆவார். பின்னர் இந்திய அணிக்கு கோச்சாக இருந்து, இப்போது வர்ண்ணையாளாராக உள்ளார்.  சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுகம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலி முதலீடு செய்த நிறுவனமே இந்தியாவின் கிட் ஸ்பான்ஸர் – கிளம்பியது புது சர்ச்சை!