Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனியின் பண்ணையில் விளைந்த காய்கறிகள் ஏற்றுமதி !!

தோனியின் பண்ணையில் விளைந்த காய்கறிகள் ஏற்றுமதி !!
, சனி, 2 ஜனவரி 2021 (17:30 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகக் கோப்பை உள்ளிட்ட மூன்று கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தவரும் பல இளைஞர்களுக்கு முன்னோடியாக உள்ளவர் தோனி.

இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். பின்னர் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார். ஆனால் சென்னை அணி சூப்பர் லீக்கில் வெளியேறி விமர்சனங்களைச் சந்தித்தது.

இந்நிலையில், அடுத்த வருடம் ஐபிஎல் தொடரிலும்  தோனி சென்னை அணியில் கேப்டனாகப் பதவியேற்பார் என எதிர்பார்ப்புள்ளது.

சமீபத்தி  இந்திய அரசு இந்திய விசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதியளித்துள்ள நிலையில், தோனி தனது பண்ணையில் விளைந்த காய்கள், பழங்கள் ஆகியவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்.

ஏற்கனவே ஜார்கண்ட் அரசு காய்கறிகளை ஐக்கிய அமீரகம் ( துபாய்)  நாட்டிற்கு ஏற்றுமதி பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன் கடந்த பத்தாண்டுகளில் ஐசிசியின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதுக்கு விராட் கோலியும், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதுக்கு தோனியும் ஐசிசியின் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி