Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை அணி கேப்டன் பொறுப்பில் இருந்து வனிந்து ஹசரங்கா விலகல்..!

Advertiesment
Srilanka Captain

Senthil Velan

, சனி, 13 ஜூலை 2024 (13:04 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகுவதாக அறிவித்துள்ளார்.  ஒரு வீரராக அணிக்கு தனது பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இந்த மாதம் (ஜூலை) 26ம் தேதி நடக்கிறது.

இரண்டாவது டி20 ஜூலை 27ம் தேதி நடக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜூலை 29ம் தேதி நடக்கிறது. டி20 போட்டிகள் அனைத்தும் பல்லகேலேவில் உள்ள மைதானத்தில் நடக்கிறது.
 
இந்த நிலையில், இலங்கை அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த வனிந்து ஹசரங்கா, அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் நலனைக் கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், தொடர்ந்து ஒரு வீரராக அணிக்கு தனது பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் அவரது முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷமி ஒன்றும் இளம் வீரர் இல்லை.. அணியில் இனி அவர் ரோல் என்ன?- முன்னாள் பயிற்சியாளர் கேள்வி