Publish Date: Sat, 14 Aug 2021 (11:04 IST)
Updated Date: Sat, 14 Aug 2021 (11:07 IST)
இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான கேப்டனாக இருந்து கோப்பை வென்று கொடுத்தவர் உன்முக் சந்த்.
2012 ஆம் ஆண்டு நடந்த இந்திய U19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி இறுதிப் போட்டியில் சதம் அடித்து கோப்பையை வென்றவர் உன்முக் சந்த். அதன் பிறகு அவருக்கு நடந்ததெல்லாம் சோகம்தான். இந்திய அணியில் இடம் கிடைக்கும் என காத்திருந்தவருக்கு கிடைத்தது ஏமாற்றமே. ஐபிஎல் தொடரிலும் பல அணிகள் அவரை ஏலத்தில் எடுத்தாலும் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது தன்னுடைய 28 ஆவது வயதிலேயே ஓய்வை அறிவித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடுவது என்ற முடிவை எடுத்துள்ளார். அவரின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.