Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேற்றைவிட குறைந்தாலும் 11,000க்கும் மேல் கொரோனா பாதிப்பு.. சுகாதாரத்துறை தகவல்..!

Advertiesment
நேற்றைவிட குறைந்தாலும் 11,000க்கும் மேல் கொரோனா பாதிப்பு.. சுகாதாரத்துறை தகவல்..!
, வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (10:08 IST)
நேற்று நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000க்கும் அதிகமாக இருந்த நிலையில் இன்று நேற்றைவிட குறைவு என்றாலும் 11 ஆயிரத்துக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,692 என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அளவில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 65286 என்ற இருந்த நிலையில் இன்று 66,170 என அதிகாரித்துள்ளது. 
 
மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில்  10,780  பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,258 என உயர்ந்துள்ளது
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. இன்னும் குறையும் என நிபுணர்கள் தகவல்..!