இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஜூனியர் பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி பந்து வீச்சில் தென்னாப்பிரிக்காவை சுருட்டியுள்ளது.
ஜூனியர் பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியின் இரண்டாவது சீசன் மலேசியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளின் லீக் சுற்று முதலே இந்திய அணி ஒரு போட்டியிலும் தோல்வி காணாமல் தொடர்ந்து முன்னேறி இறுதி போட்டியை எட்டியுள்ளது. இன்று இறுதி போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில், தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க பேட்ஸ்மேனான சிமோன் லௌரென்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய ஜெம்மா 16 ரன்களில் அவுட் ஆன நிலையில் அடுத்தடுத்து அனைத்து ப்ளேயர்களும் 30 ரன்களை கூட தொட முடியாமல் அவுட் ஆனார்கள். இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 20 ஓவர்கள் முடிவில் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்க அணி.
இந்திய அணியில் கொங்கடி திரிஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை திணற செய்த நிலையில், வைஷ்ணவி, ஆயுஷி, பருனிகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த எளிய இலக்கை எதிர்கொண்டு இந்தியா அணி களமிறங்கும் நிலையில் வெற்றி இந்தியாவுக்கே சாகதமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K