Publish Date: Sun, 10 Oct 2021 (10:43 IST)
Updated Date: Sun, 10 Oct 2021 (10:45 IST)
அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியின் ப்ளே ஆஃப் சுற்றில் இன்று சிஎஸ்கே, டெல்லி அணிகள் மோத உள்ளன.
அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி வருகின்றன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.
இந்நிலையில் ப்ளே ஆஃப் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி, நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. இந்நிலையில் இன்று ப்ளே ஆஃப் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.