Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RCB அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை- கர்நாடக துணை முதல்வர் பதில்!

vinoth
வியாழன், 12 ஜூன் 2025 (09:36 IST)
18 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு ஆர்.சி.பி. இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.  ஆனால் அந்த வெற்றியை முழுமையாகக் கொண்டாட முடியாத நிலையில் அந்த அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவம் ரசிகர்கள் நத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், சில சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அணியின் உரிமையாளர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர்.சி.பி. அணியை விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆர்.சி.பி. அணியின் உரிமையாளராக டையோஜியோ பி.எல்.சி. என்ற நிறுவனம் இருக்கும் நிலையில், இந்த அணியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் ஆர் சி பி அணியை வாங்க கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் ஆர்வமாக உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதை மறுத்துள்ளார் சிவக்குமார். இது குறித்துப் பேசியுள்ள சிவக்குமார் “ஆர் சி பி அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை. நான் என்னுடைய சிறுவயதில் இருந்து கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். அதன் நிர்வாகத்தில் பொறுப்பேற்க எனக்கு வாய்ப்புகள் வந்தபோதும், எனக்கு நேரம் இல்லாததால் நான் மறுத்தேன். எனக்கு எதற்கு RCB? நான் ராயல் சேலஞ்ச் கூடக் குடிப்பதில்லை.” எனத் தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments