Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று வகைக் கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதலிடம்!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (16:25 IST)
ஐசிசி கிரிக்கெட் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி டெஸ்ட்டில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
 

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னணி அணியாக உள்ளது. சமீபத்தில் நடந்த இலங்கை, நியூசிலாந்திற்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது.

தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 , டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த நிலையில்,  ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் இன்று சர்வதேச அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

ALSO READ: கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு மீண்டும் திருமணம்
 
அதில், 115 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்திலும், ஆஸ்திரேலிலியா அணி 111 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும், இங்கிலாந்து அணி 106 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும் உள்ளன.

தற்போது, இந்திய அணி ஒரு நாள், டி-20, டெஸ்ட் என மூன்று வகைக் கிரிக்கெட்டிலும் தரவரிசைப் பட்டியலில் முதலில்டம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments