Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேம்பியன் கோப்பையை கோயிலில் வைத்து சிஎஸ்கே நிர்வாகம் சிறப்பு பூஜை

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (20:01 IST)
ஐபிஎல் -2023, 16 வது சீசன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை கிங்ஸ் அணி வீரர்கள் இன்று  சென்னை வந்தடைந்த நிலையில், வெற்றிக் கோப்பையை கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி  நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இதில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   5வது முறையாக  வென்றது.

எனவே சென்னை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  இந்த நிலையில், வெற்றிக் கோப்பையுடன் இன்று சென்னை கிங்ஸ் அணி வீரர்கள்  மதியம் சென்னை வந்தடைந்தனர். இவர்களுக்கு விமான  நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐபிஎல்- போட்டியில் சென்னை கிங்ஸ் அணி வென்ற சாம்பியன் பட்டத்தை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் கோப்பையை வைத்து சிஎஸ்கே நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்தனர்.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments