Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வு இல்லை என்பதை சூசகமாக தெரிவித்த தோனி..! குஷியில் ரசிகர்கள்..!

Advertiesment
MS Dhoni
, செவ்வாய், 30 மே 2023 (07:24 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி நேற்று 5வது முறையாக அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்த நிலையில் அவர் நேற்றுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஏற்கனவே அம்பத்தி ராயுடு தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தோனியும் ஓய்வு பெற்றுவிடுவார் என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் ஓய்வு குறித்து நேற்று அவர் கருத்து தெரிவித்த போது ’என்னுடைய ஓய்வை அறிவிக்க இது சரியான தருணம் என்றாலும் எல்லா இடங்களிலிருந்தும் எனக்கு அன்பு அளவு கடந்து கிடைத்து வருகிறது
 
இத்துடன் நான் எளிதாக கிளம்பி விட முடியாது, ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால் 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது தான், அது என்னிடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் அதே நேரத்தில் என்னுடைய உடல் ஒத்துழைக்குமா என்பதையும் பார்க்க வேண்டும்
 
சென்னை ரசிகர்கள் தங்கள் அன்பை உணர்ச்சியை வெளிப்படுத்தி விதத்திற்காக அவர்களுக்கு நான் இன்னும் செய்ய வேண்டியது இருக்கின்றது என்று தான் நினைக்கின்றேன் என்று கூறினார். இதனை அடுத்து அவர் இந்த சீசன் உடன் ஓய்வு இல்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளதாகவே கருதப்படுகிறது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருங்கால மனைவி மற்றும் தோனியுடன் சிஎஸ்கே வீரர் ருத்ராஜ்: வைரல் புகைப்படங்கள்..!